ஊர்காவற்துறையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணிடம் தாலிக்கொடி அறுத்த நபர் மடக்கிப் பிடித்த பயணிகள்!!

7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுன் தாலிக் கொடி அறுத்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

ஊர்காவற்துறையைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பேருந்துக்காக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அரியாலையைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து பொக்கெற்றில் வைத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளார்.

பெண் கூக்குரல் இட்டார். அதனால் அப்பகுதியில் நின்றவர்கள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Sharing is caring!