ஊர்காவற்றுறையில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்

ஊர்காவற்றுறை பகுதியில் நேற்றுக்காலை திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை தோன்றியது.

சுனாமி அனர்த்தம் உண்டாகலாம் என அச்சமடைந்த மக்கள், இது குறித்து உடனடியாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல் வழங்கினர். எனினும் உள்வாங்கிய கடல் நீர் மட்டம் சிறிது நேரத்தில் மீண்டும் வழமைக்கு திரும்பியது.

இதேவேளை, கஜா புயலின் தாக்கத்தால் குறித்த சில பகுதிகளில் உள்ள கடல்நீர் உள்வாங்கியது. பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பியது. இதனால் எவ்வித விளைவுகளோ அல்லது ஆபத்துக்களே இல்லையென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

பொதுமக்கள் இதுகுறித்த அச்சம் கொள்ளத் தேவை யில்லை எனவும் அறி விக் கப்பட்டது.

இதேவேளை, கஜா புயல் தாக்கம் காரணமாக யாழ். குடாநாட்டின் தீவக பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்பட்டது.
இதனால் தீவுப் பகுதிக்கான போக்கு வரத்துக்கள் பூரணமாக முடங்கின. குறிப்பாக அனலைதீவுக்கான போக்கு வரத்து கடந்த 2 நாட்களாக தடைப்பட்டது. ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறையில் அங்கு செல்ல மக்கள்காத் திருப்பதை காணக்கூடியதாக இருந்தது

Sharing is caring!