எழுதாரகைப் படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை.

தீவகப் பகுதிகளில் வாழும் மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறுபட்ட இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் தமது அடிப்படைத் தேவைகளில் ஒன்றான எழுதாரகைப் படகு சேவை நிறுத்தப்பட்டதில் துறைசார் தரப்பினர் அக்கறை செலுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளுக்கு கடல் வழிப் பயணத்தையே நம்பியுள்ளனர்.

அதிக எரிபொருள் செலவு, அதிக பராமரிப்புச் செலவு ஆகியவற்றால் எழுதாரகை படகுச் சேவை நிறுத்தப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்ததாக மக்கள் கூறினர்.

நெடுந்தீவு குறிகட்டுவான் கடல் பயணத்தில் ஈடுபடும் குமுதினி வடதாரகை படகு சேவை இலவசமாக பயணத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் எழுதாரகைக்கு கட்டணம் அறவிடப்பட்ட போதும் தொடர்ந்து இயங்க முடியாமல் போனது தமக்கு கவலையளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வடதாரகையும் குமுதினி படகையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கட்டணம் இன்றித் திறம்பட இயக்குவதாகவும் எழுதாகையை ஏன் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ அல்லது வடமாகாண போக்குவரத்து அமைச்சுக்கோ சம்பந்தப்பட்டவர்கள் கையளிக்க நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Sharing is caring!