கச்சதீவுக்கு இம்முறை 11 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு!!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு இம்முறை 11 ஆயிரம் பேர் பங்குபற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் அடுத்தமாதம் 15 ஆம்திகதி இடம்பெறவுள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்ப்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

பெருநாளின் போது தேவாலய சூழலில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் வன் டே கப் பாவனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அத்துடன் அங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 150 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கச்சத்தீவுக்கு செல்லும் பக்தர்களுக்கன போக்குவரத்து சேவைகளுக்காக தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு தனியார் பேருந்தும், ,4 மணிக்கு அரச சேவை பேருந்தும் குறிகாட்டுவான் நோக்கிப் பயணிக்கும்.அதன் பின்னர் அரைமணி நேரத்துக்கு ஓர் பேருந்து சேவை இடம்பெறும்.மேலும் யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் வரையான பேருந்து சேவைகள் அனைத்தும் மதியம் 12 மணியுடன் இடைநிறுத்தப்படும்.

குறிகாட்டுவானிலிருந்து கச்சதீவுக்கான படகு சேவைகள் காலை 5 மணிக்கு ஆரம்பமாகும். கச்சதீவுக்கான படகு சேவைகள் 12.30 மணியுடன் இடைநிறுத்தப்படும். குறிகாட்டுவானிலிருந்து கச்சதீவுக்கான ஒரு வழிப்பாதைக்கு ஒருவருக்கு 350 ரூபா அறவிடப்படும்.அத்துடன் நெடுதீவிலிருந்து பயணிப்பவர்களுக்கு ஒருவருக்கு 220 ரூபா அறவிடப்படும் என்றும் கலந்துயாடலில் தெரிவிக்கப்பட்டது.

Sharing is caring!