கன்று ஈனவிருந்த பசு களவாடிக் கொலை: ஊர்காவற்றுறையில் சம்பவம்

கன்று ஈனவிருந்த பசுவொன்றைக் களவாடி இறைச்சிக்காக வெட்டிக்கொன்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக சந்தேகநபரொருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரத்தில் இந்த பசுவதை இடம்பெற்றுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கறவைப் பசுவே இறைச்சிக்காக களவாடப்பட்டு வெட்டப்பட்டுள்ளது.

குறித்த பது இன்னும் 20 நாட்களில் கன்றை ஈனவிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

கறவைப்பசு இறைச்சிக்காக வெட்டப்பட்ட இடத்தில் இறந்த நிலையில் கன்றுக்குட்டியொன்று கிடந்ததுடன், அது குறித்த கறவைப் பசுவின் வயிற்றிலிருந்த கன்று என கருதப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

Sharing is caring!