கரம்பொன் மக்களது நீர் பிரச்சினைக்கு தீர்வு

தமது பகுதியில் பாழடைந்து காணப்படும் நீர் நிலைகளை புனரமைப்பு செய்து தருமாறுகோரி ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு பிரதேச மக்கள் தவிசாளதிடம் விடுத்த கோரிக்கைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.

கடும் வறட்சி நிலவி வருவதால் ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு பிரதேச மக்கள் நீருக்காக பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் பிரதேசத்தின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் மேற்கொண்ட முயற்சி காரணமாக நிவர்த்தி குறித்த பகுதி கிணறுகள் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!