கற்றாளை திருடிய இளைஞர்கள் கைது..! தீவகத்தில் தொடரும் கற்றாளை திருட்டு..

யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞர்களை மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ்

தலமையிலான பொலிஸ் குழு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

Sharing is caring!