கவனிப்பாரின்றி அனலைதீவு நயினாகுளம்

அனலைதீவு ஐயனார் கோவிலின்பால் பதிகப் பாடல்பெற்ற நயினாகுளம் தற்போது ஐயனார்கோவில் பரிபாலன சபையின் அக்கறையின்மையாலும் மக்களின் ஆர்வமின்மையாலும் மழைநீர் தேக்கிவைக்கும் குளமாயிருந்து இன்று நீர் தேங்கிநிற்கும் குட்டையாக மாறியிருக்கிறது. கடலால் சூழப்பட்ட நம் தீவகங்களின் நிலத்தடி நீர்சேமிப்பில் இப்படியான குளங்கள் அளப்பெரும் பங்காற்றுபவை என்பதை உணர்ந்து இக்குளம் முறையான நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டு மழைக்கால நீர் வளத்தை தேக்கிவைத்து நிலத்தடிநீரை வளப்படுத்துவதோடு கமத்தொழில் வளர்ச்சிக்கும் பயன்படும்வகையில் மீள் கட்டுமானத்திற்கு உட்படுத்தி வடிவமைக்க ஊரவர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றிட முன்வரவேண்டுமென்று பணிவாக வேண்டுகிறோம்.

நிலத்தடிநீர் சேமிப்பில் அக்கறைகொள்ளும் நாம் இருக்கின்ற குடிநீர்க் கிணறுகளிலிருந்து பவுசரால் நீர் உறிஞ்சி குடிநீரை உப்புநீராக்கும் தொலைநோக்கற்ற சமூக அக்கறையற்ற தொழில்வாய்ப்பு அடிப்படையில் மட்டுமேயான நடைமுறைகளை நிரந்தரமாக நிறுத்தி அனலைதீவு மக்களின் எதிர்கால சந்ததியினரின் இயற்கை வளத்தை பேணிப்பாதுகாத்து வளப்படுத்துவதில் திண்மையான கவனம்செலுத்தவேண்டிய நாம் அனைவரும் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் செயற்படவெண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை உணர்வோம் என பிரதேச மக்கள் ஆதங்கள் வெளியிட்டுள்ளனர்.

Sharing is caring!