காப்பெற் வீதியாக மாறும்- ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதி!!

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை கிராம வீதியை திருத்துவதற்கான அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டு, அதற்கான 9 கோடி 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை கிராம மக்கள் நீண்டகாலமாக தமது போக்குவரத்துகளின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த வீதியின் அபிவிருத்தியின் அவசியம் குறித்தும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான முயற்சிகளை கட்சி மேற்கொண்டமைக்கு அமைவாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊடாக 9 கோடி 30 இலட்சம் ரூபா நிதி வீதியின் புனரமைப்புக்காக தற்போது ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது

இதனூடாக குறித்த வீதி புனரமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதுடன், வீதி மிக விரைவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Sharing is caring!