குறிகட்டுவான் மாணவிக்கு கனடா பரோபகாரி உதவி

கனடாவில் வசிக்கும் திரு.திருமதி ரவிக்குமார் விஜிதா தம்பதிகள் தமது செல்வப் புதல்வி கார்த்திகாவின் பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு குறிகாட்டுவானில் வசிக்கும் ஶ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய மாணவி ஒருவருக்கு ஒரு துவிச்சக்கரவண்டியையும், ரூபாய் 8320 காசை உலக மையத்திற்கும் வழங்கியுள்ளார்.

இன்று(15-12-2017) உலக மையத்தின் பொருளாளர் பரமேஷ் அவர்களால் இத்துவிச்சக்கரவண்டி குறித்த மாணவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உதவியினை மேற்கொண்ட ரவிக்குமார் விஜிதா தம்பதிகளிற்கு எம்மண் சார்பாகவும், எம்மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவிக்கும் அதேவேளை பத்தாவது பிறந்தநாளை கொண்டாடிய செல்வி கார்த்திகா ரவிக்குமாரிற்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா

நடுவப்பணியகம் – கல்விப்பிரிவு
புங்குடுதீவு உலக மையம்
1ம் வட்டாரம்
புங்குடுதீவு

Sharing is caring!