சாதனை….நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமனம்

யாழ்.நெடுந்தீவுக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு மக்கள் தொடா்ச்சியாக கேட்டுவந்த நிலையில், நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது-:ஆண்­டு­தோ­றும் குறைந்த மருத்­து­வர்­களே வடக்­குக்கு நியமிக்கப்படுகின்­ற­னர். அவர்­கள் விண்­ணப்­பித்த மாவட்­டத்­துக்கு ஏற்ப மருத்­து­வர்­கள் நிய­ம­னம் செய்யப்படுவர்.

நிரந்­தர மருத்­து­வர்­கள் இல்­லாத நிலை­யில் சில மருத்­து­வ­ம­னை­கள் இயங்­கு­கின்ற­ன.அந்தவகையில் நெடுந்தீவில் சேவை­யாற்­று­வ­தற்கு மருத்­து­வர்­கள் முன்­வ­ராத நிலை­யில் அங்கு நிரந்­தர மருத்­து­வரை நிய­மிக்க முடி­யா­தி­ருந்­த நிலையில் தற்­போது அங்கு ஒரு நிரந்­தர மருத்­து­வர் நிய­மிக்கப்பட்­டுள்­ளார்.

என்று தெரி­விக்­கப்­ப ட்­டது.நெடுந்­தீ­வில் நிரந்த மருத்­து­வர் நிய­மிக்­கப்­ப­டாது இருந்­த­போது, ஓய்வு பெற்ற மருத்து­வர் ஒரு­வர் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் சேவை­யாற்­று­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்டி­ருந்­தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!