சிரட்டைகளில் உருவங்களை வடிவமைக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்.

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சிரட்டையில் உருவங்களை வடிவமைக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் நெடுந்தீவு பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி தலைமையில் நடைபெற்றன.

இதில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமுர்த்தி சந்தைப்படுத்தல் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் 26 யுவதிகளுக்கான சிரட்டையில் உருவங்களை வடிவமைக்கும் மற்றும் முருகைக்கல் பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டு இதில் கலந்து கொண்டவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் சமுர்த்தி மாதிரி வீட்டுத்தோட்ட போட்டியில் கிராமமட்ட பிரிவிலும் பிரதேச மட்ட பிரிவிலும் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் கலந்துகொண்டு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் யாழ். மாவட்ட சமுர்த்தி க ண்காணிப்பு முகாமையாளர் பாலகரன், நெடுந்தீவு பிரதேச செயலக தலைமையக முகாமையாளர் ம.கியூமன், சமுத்தி வங்கி முகாமையாளர் எஸ்.சிறிதரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Sharing is caring!