தீவகத்திற்கு பஸ் மூலம் கடத்தப்பட்ட பெருந்தொகையான மதுபான போத்தல்கள் பறிமுதல்

யாழிலிருந்து தீவகத்திற்கு பஸ் மூலம் கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது.

அதோடு குறித்த பஸ் சாரதி மற்றும் நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் சமண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன .

இதேவேளை வேலணையை சேர்ந்த கால்நடை திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரே இவற்றை யாழ்நகரில் கொள்வனவு செய்து அல்லைப்பிட்டியிலுள்ள ஒருவருக்கு அனுப்பிவைத்ததாக நடத்துனர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் மேற்படி இருவரையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Sharing is caring!