தீவகத்தில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச பாடசாலை!

தீவக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசத்தின் எண்ணக்கருவில் இந்தியாவின் ‘Montfort School’ சர்வதேச பாடசாலையொன்று அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனிடம் இந்த கல்விப் பணியை சிறப்பாக மேற்கொள்ள தமது ஒத்துழைப்பை வழங்குமாறு யாழ். மறை மாவட்ட ஆயர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு இணங்க அங்கஜன் இராமநாதன் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்டதுடன் இதனை துரிதப்படுத்தவும் தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஆயரிடம் அவர் உறுதியளித்தார்.

Sharing is caring!