நல் உள்ளம் கொண்ட திரு வரதராஜன் குடும்பம் (கனடா)அவர்களின் அனுசரணையில் உணவு பொதிகள்

உலக அளவில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்திய கொரோனா இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. அன்றாடம் வாழ்வை நடாத்துவற்கே திண்டாடும் நிலையில் அருணோதயா சனசமூக நிலையத்தின் முயற்சியால் நல் உள்ளம் கொண்ட திரு வரதராஜன் குடும்பம் (கனடா)அவர்களின் அனுசரணையுடன் இரண்டாம் கட்டமாக 25 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இவ் உதவியினை பெற்றுத்தந்த ஆசிரியர் அருணகிரிநாதன் அருண்ராஜ் அவர்களுக்கும் அருணோதயா சனசமூக நிலையம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். இவர்களைப் போன்ற நல்லுள்ளங்கள் உதவிகள் செய்யும் பட்சத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு மேலும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாக அருணோதயா சனசமூக நிலைய நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது. ஆபத்தில் உதவும் நல்லுள்ளங்களாலேயே மனிதம் இன்றும் வாழ்ந்து  கொண்டிருக்கிறது.

Sharing is caring!