நெடுந்­தீ­வுப் பிர­தேச சபை உபதவிசாள­ரைத் தெரிவு செய்ய சட்டமா அதி­ப­ரி­டம் ஆலோ­சனை!!

நெடுந்­தீ­வுப் பிர­தேச சபை உபதவிசாளர் தெரிவு தொடர் பான இறு­தித் தீர்­மா­னத்தை மேற் கொள்வதற்­கான சட்ட ஆலோசனையை வழங்க வேண்­டும் என்று வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் கோரி­யுள்­ளார்.

நெடுந்­தீ­வுப் பிர­தேச சபை­யில் தற்போது 13 உறுப்­பி­னர்­கள் உள்ளனர். நெடுந்­தீ­வுப் பிர­தேச சபையின் ஆட்­சி­யைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக் கைப்பற்றியிருந்­தது. உப­த­வி­சா­ளர் பதவி வகித்­த­வர் சுக­வீ­னத்­தால் உயிரி­ழந்த நிலை­யில் அந்­தப் பதவி வெற்­றி­டத்தை நிரப்­பக் கட்­சி­யால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

அந்­தச் சபை­யில் எந்­தக் கட்­சி­யும் 50 சத­வீ­தத்­துக்கு அதிக ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருக்­க­வில்லை. உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் சபைத் தவி­சா­ளர், உப தவி­சா­ளர் தெரி­வு­கள் நடை­பெற்­றி­ருந்­தன.

தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர் மாற்­றங்­க­ளும் உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் நடை­பெ­ற­வேண்­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளது. உப­த­வி­சா­ளர் தெரி­வுக்­காக உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் மூன்று தட­வை­கள் ஏற்­பா­டு­கள் மேற்­கொண்­ட­போ­தும் சபை­யில் கோரம் இன்­மை­யால் தேர்வு நடை­பெ­ற­வில்லை.

அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்­பான அறி­வு­றுத்­த­லைப் பெற்­றுக்­கொள்­ளும் நோக்­கில் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் சட்­டமா அதி­ப­ருக்­குக் கடி­தம் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

இந்­தத் தெரி­வுக்­கள் தேர்­தல் சட்­டத்­துக்கு கீழேயே நடை­பெ­று­கின்­றது என்­ப­தா­லும், இதற்கு முன்­னர் இவ்­வா­றா­ன­தொரு நிலமை ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தா­லுமே சட்­டமா அதி­ப­ரின் ஆலோ­ச­னையை, வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரும், முத­ல­மைச்­ச­ரு­மான விக்­னேஸ்­வ­ர­னு­டன் கலந்­து­ரை­யா­டியே, வடக்கு உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் எடுத்­துள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ள­ரால் கடி­தம் அனுப்­பப்­பட்டு இரண்டு வாரங்­க­ளுக்கு மேலா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது

Sharing is caring!