நெடுந்­தீவு மருத்­து­வ­ம­னை­யில் நிரந்­தர மருத்­து­வ­ரின்றி அவ­லம்

நெடுந்­தீவு பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு நீண்ட கால­மாக நிரந்­தர மருத்­து­வர் இன்­றிச் சிர­மங்­களை எதிர்­கொள்­வ­தா­கப் பிர­தேச மக்கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

தற்­போது ஏனோ­தானே என்­று­தான் மருத்­து­வ­சேவை நடை­பெற்று வரு­கி­றது. முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்பினர்­கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களிடம் கோரிக்கை விடுத்­தும் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளும் இது­வரை எடுக்கப்டவில்லை.

பல ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டங்­கள் கூட்­டப்­பட்­ட ­னவே தவிர எந்­த­வி­த­மான பல­னும் இல்லை என்­றும் அவர்­கள் கவலை தெரிவிக்­கின்­ற­னர். இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரிவித்தா­வது:

ஆகஸ்ட் 14 ஆம் திக­தி­யி­லி­ருந்து நிரந்தர மருத்­து­வர்­கள் இல்லாமல் பெரும் துன்­பங்­க­ளைச் சந்­தித்து வரு­கின்­றோம். இரவு நேரங்­க­ளில் மருத்­து­வர் இல்­லாது போனால் என்ன நிலைமை உரு­வா­கும் என்­பதை ஒரு கணம் உரிய தரப்­பி­னர் சிந்­திக்க வேண்டும்.

தற்­கா­லி­க­மாக மருத்­து­வர் வேண்­டாம். நிரந்­தர மருத்­து­வரை நியமிக்க வேண்­டும் . எமக்­கான மருத்­து­வரை நிய­மிக்­காத பட்சத்தில் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை என்று கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் செயலாளர் எஸ்.திரு­வா­க­ர­ னி­டம் கேட்­ட­போது அவர் தெரிவித்ததா­வது:

நெடுந்­தீவு மருத்­து­வ­ம­னை­யில் நிரந்­தர மருத்­து­வர் இல்லை என்­பது தொடர்­பில் கொழும்பு சுகா­தார அமைச்­சுக்கு ஏற்­க­னவே அறிவிக்கப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளும் வரு­டம்­தோ­றும் எந்­தப் பிரதேசத்­தில் மருத்­து­வர்­கள் இல்லை என்­பதை விளம்பரப்படுத்துவார்­கள். நெடுந்­தீ­வில் பணி­யாற்ற மருத்­து­வர்­கள் எவ­ரும் முன்­வ­ரு­வ­தில்லை.

ஓய்­வு­பெற்ற மருத்­து­வர் ஒரு­வர் தற்­போது மீள் நிரப்­பல் சேவைக்காக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். சேவையை எந்­த­நா­ளும் வழங்­குங்­கள் என்று அவ­ருக்­கும் நாம் அழுத்­தம் கொடுக்க முடியாது. இந்த நிலை­யில் பல்­வேறு மருத்­துவ மனை­கள் உள்­ளன என்று தெரி­வித்­தார்.

Sharing is caring!