நெடுந்தீவில் அலுவலகப்பணியாளர் போட்டிப்பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

அலுவலக உதவியாளர் போட்டிப் பரீட்சைக்காக பரீட்சாத்திகளை தயார்படுத்தும் வழிகாட்டல் வகுப்புக்கள் நெடுந்தீவு பிரதேசசெயகத்தில் இடம்பெற்றது.

இரண்டு நாட்களைக்கொண்ட குறித்த வழிகாட்டல் கருத்தரங்கானது நேற்றைய தினமும் (23 ஜனவரி) இன்றைய தினமும் (24 ஜனவரி) நெடுந்தீவு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பரீட்சாத்திகளின் மொழியறிவினை மேம்படுத்தும் விதமான கருத்தரங்கானது நேற்றைய தினமும் உளச்சார்புடன் தொடர்புடைய வழிகாட்டல்களானது இன்றைய தினமும் காலை 09.30 மணிமுதல் 12.30 மணிவரை இடம் பெற்றிருந்தன.

நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் நெடுந்தீவு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான சமூக மேம்பாட்டுக்குழு என்பனவற்றின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வானது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!