நெடுந்தீவு அபிவிருத்தி நடவடிக்கையில் நிதி மோசடி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் நிதி, பிரதேச செயலக அதிகாரிகளால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு பிரதேச செயலக அதிகாரிகள், அபிவிருத்திப் பணிகளுக்கான விலைமனுக்களைத் தமக்கு நெருங்கியவர்களுக்கு வழங்குவதாக ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகளை ​மேம்படுத்தும் நடவடிக்கைகளை நிறைவுசெய்யாது, இடைநடுவே கைவிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!