நெடுந்தீவு கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது

நாட்டின் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்று இரவு (11) கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீனவர்களின் 5 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!