நெடுந்தீவு படகுச்சேவையில் புதன்கிழமை முதல் நேரமாற்றம்

நெடுந்தீவு படகுச்சேவையின் நேரம் எதிர்வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 15) முதல் மாற்றப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் எவ்.சி.சத்தியசோதி தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கு காலை 6 மணிக்கு நெடுந்தாரகையும் காலை 7.30 மணிக்கு தனியார் படகும் காலை 9.30 மணிக்கு குமுதினியும் பிற்பகல் 2.30 மணிக்கு நெடுந்தாரகையும் மாலை 4.30 மணிக்கு வடதாரகையும் புறப் படவுள்ளது.

அது போல் குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு வடதாரகை காலை 7.30 மணிக்கும் நெடுந்தா ரகை காலை 8.30 மணிக்கும் குமுதினி பிற்பகல் 1.30 மணிக்கும் தனியார் படகு பிற்பகல் 3 மணிக்கும்

நெடுந்தாரகை மாலை 4.30 மணிக் கும் புறப்படுமென பிரதேச செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!