நெடுந்தீவு பிரதேசசபை விசாரணை முடக்கம்.

நெடுந்தீவுப் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் முடங்கியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப்பணிகள் இடம்பெறவில்லை என்று தெரியவருகின்றது.

நெடுந்தீவுப் பிரதேசசபையின் உப தவிசாளார் மே மாதம் 9ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து அந்தப் பதவி வெற்றிடமாகியது. சபையின் எந்தவொரு கட்சிக்கும் 50 சதவீதத்துக்கு மேல் ஆசனங்கள் இன்மையால் வடக்கு மாகான உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடு உபதவிசாளர் தெரிவுக்காக நான்கு கூட்டங்கள் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடத்தப்பட்டபோதும், கோரம் இன்மையால் ஒத்தி வைக்கப்பட்டன.

இதனையடுத்து உள்ளூராட்சி ஆணையாளர் அப்போதை வடக்கு உள்ளூராட்சி அமைச்சர் சி.வி.விகனேஸ்வரனுக்கு அறிவித்தார்.

உபதவிசாளர் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கு மாறு ஒய்வுபெற்ற நீதிபதி வசந்தசேனன் தலையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதியுடன் வடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் முடிவுக்கு வந்தது. அதன் பினனர் வடக்கு மாகாண அளுநர் விசாரணை நடத்துவதற்கான ஆணையை நியமனத்தை வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி வசந்தசேனன் கோரியுள்ளார். இது வரையில் மீள் நியமனம் வழங்கப்படவில்லை.

நெடுந்தீவுப் பிரதேசசபை உபதவிசாளர் இன்றியே இயங்கி வருகின்றது.

Sharing is caring!