புங்குடுதீவிலுள்ள கால்நடை பசுக்களை அறுத்துக் கொண்டிருந்தபோது மடக்கிப் பிடிக்கப்பட்டார் 5 திருமணம் செய்தவர்!

புங்குடுதீவிலுள்ள கால்நடை பசுக்களை இறைச்சிக்காக கடத்தும் மண்டைதீவினை சேர்ந்த ஒருவர் நேற்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

பசு மாடொன்றை சட்டவிரோதமாக வெட்டிக் கொண்டிருந்தபோது, ஆசாமியை அந்த பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.

வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் புங்குடுதீவு J/26 பிரிவு கிராமசேவகர் சிறீதரன் ஆகியோர் முயற்சியால், ஆசாமி மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மடத்துவெளி – வல்லன் பகுதிகளுக்கிடைப்பட்ட பற்றைக்காட்டு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த நபர் விவாகரத்து செய்யாமலேயே இதுவரை ஐந்து திருமணங்களை புரிந்துள்ளதாகவும், இறுதியாக புங்குடுதீவு மடத்துவெளி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் ஊர்காவற்துறை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Sharing is caring!