புங்குடுதீவில் கற்றாழை செய்கை பெருவெற்றி

தீவகத்தில் புகையிலைச் செய்கைக்கு மாற்றீடாக அறிமுகம் செய்யப்பட்டு வேலணைப் பிரதேச செயலகத்தின் உதவியுடன் செய்கை பெருவெற்றியளித்துள்ளதாக கற்றாழை செய்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடந்த வருட நடுப்பகுதியில் வேலணை பிரதேசசெயலகம் ஊடாக, கற்றாழை செய்கை குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தீவகப் பிரதேச விவசாயிகள் மத்தியில் விழ்ப்புணர்வுக் கரத்தரங்குகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது.

குறிப்பாக 2020 ஆண்டில் அரசாங்கத்தால் புகையிலைச் செய்கை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக கற்றாழை செய்கையினை மேற்கொள்வோருக்கு பிரதேச செயலகம் ஊடாக வங்கிக்கடன் உதவிகள் மற்றும் பயிர்செய்கைக்கான உதவிகள் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில் சில விவசாயிகள் குறித்த செய்கையில் ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில் புங்குடுதீவில் திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை என்ற பெண் குறித்த கற்றாழைச் செய்கையினை பரீட்சார்த்தமாக மேற்கொண்ட நிலையில் குறித்த செய்கை வெற்றியளித்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை (10) மேலும் அவரின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக வேலணை பிரதேசசெயலகம் ஊடாக ஊரெழு நியூலங்கா பார்மில் இருந்து மூவாயிரம் கற்றாழைக் கன்றுகள் வழங்கப்பட்டன.

தற்போது கற்றாழை உற்பத்தி தீவகத்தில் ஒரளவு மேம்பட்டுவரும் நிலையில் குறித்த உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் பிரதேச செயலகமூடாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் விவசாயிகள் பாரிய நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Sharing is caring!