புங்குடுதீவில் பயன்தரு மரங்கள் விநியோகம்

புங்குடுதீவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு முதற் கட்ட நடவடிக்கையாக மிகவும் பயன் தர வல்ல மரக்கன்றுகள்  சுவிஸ் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த சமூக அக்கறையுள்ள சிலரால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக,   ஊரதீவு, கேரதீவு, மடத்துவெளிவாழ் மக்களுக்கு இக்கன்றுகள் வழங்கப்பட்டதாகவும்-மக்கள்  மிகவும் சந்தோசமாகவும் ஊக்கத்துடனும் மரக்கன்றுகளைப் பெற்றுச் செல்வதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளான….
திரு சுப்பிரமணியம் சண்முகம்
திரு கந்தையா கணேசராசா, ஆகியோரின் அனுசரணையிலேயே  இப்பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாக மேலும் அறிய முடிகின்றது.

Sharing is caring!