மாயம்…..காரைநகர் மீனவர்கள் இருவரை காணவில்லை..???

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.

மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (02) இரவு ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணாமற்போயுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான கோடீஸ்வரன் குகபிரியன் மற்றும் 25 வயதான தவராசா சத்தியராஜ் என்ற இளைஞர்களே காணாமற்போயுள்ளனர்.

மீனவர்கள் காணாமற்போனமை தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் தேடும் பணிகளில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Sharing is caring!