மிளகாய் விதை உற்பத்தி- அனலைதீவில் வெற்றி!

அனலை தீவில் விதைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்ப்ட மிளகாய் செய்கை வெற்றியளித்துள்ளது.

நல்லின மிளகாய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அனலை தீவு பகுதியில் முதற் தடவையாக மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு கால் ஏக்கருக்கு 200 கிராம் செய்கையை மேற்கொள்ள, மிளகாய் விதைகள், தூவல் நீர்ப் பாசனம், பாதுகாப்பு வலைகள் என்பன 19 பேருக்கு வழங்கப்பட்டன.

செய்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முதல் செய்கை வெற்றியளித்துள்ளது. அங்கு சுமார் 2 ஆயிரம் கிலோ கிராம் மிளாகாய் விதை உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Sharing is caring!