யாழ்.தீவகத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு!! -சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு

யாழ் தீவகம் ஊர்காவற்றுறையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வதுடன் அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் இருவேறு வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்குகளின் விசாரணையின் போதே ஊர்காவற்றுறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.

Sharing is caring!