விளையாட்டு துறை ஆசிரியர் அனோராஜ் கௌரவிப்பு

அனலைதீவு வடலூர் அ.த.க.வித்தியாலயத்தில் 05.05.2008 தொடக்கம் 25.05.2012 வரையும், அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் 28.05.2012 தொடக்கம் இன்றுவரை சமூக அக்கறையும், அர்ப்பணிப்பும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டு சிறந்த தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி மாணவர்களின் விளையாட்டுத் துறையிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியும், சமூகப்ப ணிகளில் அயராது உழைத்தும், அனலைதீவு மக்களின் வளர்ச்சியில் அக்கறையோடு செயற்பட்டும் இன்றைய தினம் (22.07.2018) ஆசிரியராக நியமனம் பெற்று நாளை யாழ் அனலைதீவு சதா சிவ மகா வித்தியாலயத்தில் கடமையை பொறுப்பேற்க உள்ள
திரு இராமநாதன் அனோராஜ் அவர்களை ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம். அனலைதீவு அருயோதயா விளையாட்டுக்கழக வளர்ச்சிப் பாதையில் இவரின் பங்களிப்பு காத்திரமானது.
ஆசிரியர் திரு இராமநாதன் அனோராஜ் அவர்களின் பணி சிறப்புற நாமனைவரும் வாழ்த்துவோம்.

Sharing is caring!