வேலணைப்பிரதேசத்து வளங்களை வெளியிடம் எடுத்துச் செல்லத் தடை பிரதேச சபையில் தீர்மானம்

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேச வளங்களை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லாது தடுத்துப் பாதுகாப்பது என்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20 ஜனவரி)) நடைபெற்றது. அதில் சபை உறுப்பினார்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்தத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

வேலணை பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வு நடக்கின்றது. அள்ளப்படும் மணல் வெளி இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படும்கின்றது. எமது மக்களின் கட்டுமானத் தேவைகளுக்கு மணல் பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது அதைப் போன்றே பனை மரங்களும், பூவரச மரங்களும் வெட்டப்படுகிறன தமது காணிகளில் உள்ள மரங்களை தேவை ஏற்படின் அதனைவெட்டி பயன்படுத்தலாம். ஆனால் சட்ட விரோதமாக மரங்கள் தறிக்கப்பட்டு இங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறன.

வேறு தேவைகளை காரணம் காட்டி இங்கு வருபவர்கள் காற்றாளைச் செடிகளை வெட்டி செல்கின்றனர். கரையோரப் பாதுகாப்பு கருதி இந்தச் செடிகளை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பட்டா மற்றும் முச்சக்கர வண்டிகளில் வரும் வெளிமாவட்டத்தைச் சோந்தவர்கள் அவற்றை வெட்டுகின்றனர்.
தொடர்ச்சியாக வேலணைப் பிரதேசத்தின் வளங்கள் அழிக்கப்படுகின்றன. எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் கூட இந்த வளங்களை தமது தேவைகளுக்கும்கூட பயன் படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும். உரிய அதிகாரிகளின் மூலம் இவற்றை தடை செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரினார் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. பழைய இரும்பு விற்பனை வேலணை பிரதேச சபைக்குட்ட பகுதிகளில் பழைய இரும்பு சேகரிக்கும் நோக்கில் வெளிபிரதேசத்தில் இருந்தும் வரும் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் மும்சபையில் நிறைவேற்றப்பட்டது. பழைய இரும்பு சேகரிப்பதற்கு வெளியில் இருந்து வருபவர்களில் சிலர் கால் நடைகளைக்களவாடுதல்.

பழைய கட்டஙகளை உடைத்து இரும்பு எடுத்தல் போன்ற பல்வேறு திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே வேலணைப்பிரதேச சபைக் குட்பட்ட பிரதேசத்தில் வெளி பிரதேசத்தில் இருந்து பழைய இரும்பு சேகரிப்பது தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டது சபையின் எல்லைக்குட்பட்டவர்கள் பழைய இரும்பு சேகரிக்கும் வியாபாரத்திலாடுபட வேண்டும் என்றால் சபை அனுமதியைப் பெறவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட

????அனுமதியின்றி அமைந்த கடலட்டை பண்ணைகள்

வேலணை பிரதேச சபைக் குட்பட்ட பகுதிகளில் அனுமதி
பெறாமல் அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளை அகற்றல்தொடர்பான தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் முன்வைத்தார்.

சபையின் எல்லைக்குட்பட்ட கடல் அட்டை பண்ணைகளை அகற்ற வேண்டும் என்ற தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது நடைமுறைபடுத்தபடவில்லை . சுமார் 15 கடல் அட்டை பண்ணைகள் இங்கு உள்ளன. அவற்றில் ஒன்று மாத்திரமே சபையின் அனுமதிபெற்றுச் செயற்படுகின்றது, ஏனையவை தொடர்பாக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை .
இந்தப் பண்ணைகளில் எமது பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. ஏற்கனவே நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் படி அனுமதி பெறாமல் உள்ள கடல் அடடை பண்ணைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவிசாளர் உறுதியளித்தார்.

????சட்டவிரோதக் கடைகள்

வேலணைப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோதக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற தீர்மானம் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
உறுப்பினர் நாவலனால் முன்வைக்கப்பட்டுசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டெங்குக் கட்டுப்பாடு
டெங்கு பெருகும் சூழலை உடைய தனியார் காணிகளை இனங்கண்டு அவற்றைச் சபையினர் பொறுப்பெடுத்து துப்புரவு செய்து தண் டம் அறவிடுவது தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் திருமதி அனுசியாவால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலில் சபை மற்றும் சபையின் காணிகள் எவை என்று இனங்காணப்பட்டு உப அனுலகம் உள்ளிட்ட இடங்களால் காணப்படும் பற்றைகளை அகற்றவேண்டும் அதை முன் உதாரணமாககொண்டு தனியார் காணிகளை இனம் கண்டு அவற்றை சபையின் கீழ்கொண்டு வந்துதண்டம் அறிவிடும் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்து தீர்மானமநிறை வேற்றப்பட்டது.

????கட்சி சார்ந்த அமைப்பாளர்

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஊடகவியலாளர்களுக்கும் விருந்தினர்களுக்கும் ஒதுக் கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபை அமர்வை சில மணி நேரம் பார்வையிட்டார்.

Sharing is caring!