வேலணை நடராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

யா/வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தின்பரிசளிப்பு விழாவில் கஜதீபன் கலந்துகொண்டார்….

யா/வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலமையில் நடைபெற்றது .
முதன்மை விருந்தினராக வடமாகாண சபையின் உறுப்பினர் திரு பா.கஜதீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவில் வைத்து இப்பாடசாலையில் ஆரம்ப கல்விகற்ற
பாடசாலையின் காலஞ்சென்ற பழைய மாணவி திருமதி சர்மிளா விஜயரூபனின் ஞாபகார்தமாக அவரது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தோழர்கள் புலமைப் பரிசில் நிதியமொன்றை அறிமுகம் செய்துள்ளார்கள்.இவ் ஞாபகாத்த நிதியத்தினூடாக ஒவ்வொரு வருடமும் இவ் வித்தியாசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு பணப்பரிசில் வழங்கப்படும்! அமரர் திருமதி சர்மிளா விஜயரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி – சிற்பனையூர் சிவலிங்கம் அசோக்குமார்

Sharing is caring!