வேலணை பிரதேச சபைக்கு மேலதிகமாக ஒரு உறுப்பினர்

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் தீவகத்தில் வேலணை பிரதேச சபைக்கு ஒரு உறுப்பினர் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 பேரிலிருந்து 8 பேராக குறைக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச சபைக்கு உறுப்பினர் எண்ணிக்கை 9 பேரிலிருந்து 8 பேராக குறைக்கப்பட்டுள்ளனர்.
வேலணைப் பிரதேச சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 பேரிலிருத்து 12 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுக்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring!