வேலணை மத்திய கல்லூரிக்கு இரண்டு பல்லூடக மேல்நிலை எறிகருவிகள்

வேலணை மத்திய கல்லூரிக்கு கல்லூரிக்கு இரண்டு பல்லூடக மேல்நிலை எறிகருவிகள் (Multi-Media Overhead Projectors) அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஒரு எறிகருவி பாடசாலைப் பிரதான மண்டபத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாவதை தேசிய கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதியும் பழைய மாணவருமான திரு ச. அமிர்தலிங்கம் அவர்கள் மூலம் அதிபர் திரு சி. கிருபாகரன் அவர்களிடம் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் கையளிக்கப்பட்டுள்ளது. இது வகுப்பறைகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த முன்னுதாரணமான செயற்பாட்டுக்கு 1565 டொலர்கள் நிதியுதவியளித்த காலஞ்சென்ற திருமதி சாயாதேவி செல்வராசா குடும்பத்தினருக்கு பழைய மாணவர் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றிய பழையமாணவரும் பொறியியலாளருமான திரு சிந்துசன் தர்மராஜேந்திரன் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பிலும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலும் நன்றி கலந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி. இளஞ்செழியன் (தலைவர்)
வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா

செய்தி – சிற்பனையூர் சிவலிங்கம் அசோக்குமார்

Sharing is caring!