அனலைதீவு கடலில் 103 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 3 பேர் கைது!

யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் 103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

டிங்கி படகொன்றில் கஞ்சா கடத்தி சென்ற 3 சந்தேகநபர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 345 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Sharing is caring!