அனலைதீவுக்கு ஒதுக்கப்பட்ட அம்புலன்ஸ் படகு எங்கே? மக்கள் விசனம்

அனலைதீவு வைத்திசாலையில் அவசர அம்புலன்ஸ் சேவை இல்லாததால் கஷ்டப்பட்ட மக்களும் அவசரத்திற்கும் பெரும் சிரமத்தில் உள்ளார்கள்.

யாழ் அனலைதீவு மக்களின் அவசர வைத்திய சேவைக்கென வடமாகண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் (5மில்லியன்) ரூபா செலவில் புதிதாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு இன்னும் அனலைதீவு மக்களின் சேவைக்கு வரவில்லை எங்கு என்ன நடந்தது என்று தெரியாது உள்ளது என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். உரியவர்கள் நடவடிக்கை எடுத்து மிக விரைவில் இந்த சேவையை இப்பிரதேசத்திற்கு கிடைக்க ஆவன செய்வார்கள் என மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Sharing is caring!