யாழ். தீவகப் பாடசாலை அதிபர் ஆசிரியரின் கொடூரத் தாக்குதல்..மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

யாழ்.ஊர்காவற்றுறையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை மற்றும் அதிபரின் தாக்குதலுக்குள்ளான பாடசாலை மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேற்றய தினம் 7 மணியளவில் குறித்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன், போதனா வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இன்று காலையே, ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!